பத்திரத் தொகை குறித்த அடிப்படைகள்

By Anika Legal | Fri 9th Dec. '22

Bonds Basics
பத்திரத் தொகை என்றால் என்ன?

பத்திரத் தொகை என்பது குடியிருப்பு பத்திர ஆணையத்திற்குச் (RBTA) செலுத்த வேண்டிய ஒரு பாதுகாப்பு வைப்புத்தொகை ஆகும், இதை செலுத்தப்படாத வாடகை, வீட்டிற்கு ஏற்படும் சேதம் மற்றும் இது போன்ற பிற விஷயங்கள் காரணமாக ஏற்படும் பொறுப்புகளுக்காக மட்டுமே பயன்படுத்த முடியும். பொதுவாக நான்கு மாத வாடகைத் தொகை இதற்காகச் செலுத்தப்படும் மற்றும் இது குடியேறுவதற்கு முன் செலுத்தப்படுகின்ற முன்பணம் ஆகும். ஒன்றிற்கு மேற்பட்ட வாடகைதாரர்கள் இருந்தால், பத்திரத் தொகையானது பொதுவாக வீட்டின் வாடகைதாரர்களுக்கு இடையே சமமாகப் பகிர்ந்துகொள்ளப்படுகின்றது.

பத்திரத் தொகையை நான் ஏன் செலுத்த வேண்டும்?

பத்திரத் தொகையானது உங்கள் வாடகை ஒப்பந்தத்தில் விளக்கிக் கூறப்பட்டுள்ள விதிகளை நீங்கள் பின்பற்றுவீர்கள் என உங்கள் நில உரிமையாளருக்கு நீங்கள் செலுத்துகின்ற உத்தரவாதமாகச் செயல்படுகின்றது. நீங்களோ அல்லது உங்கள் விருந்தினர்களோ வீட்டிற்கு ஏதாவது சேதம் ஏற்படுத்தியிருந்தால், அல்லது குறிப்பிட்ட சில கட்டணங்கள் அல்லது வாடகையை நீங்கள் செலுத்தத் தவறியிருந்தால், உங்கள் நில உரிமையாளர் இந்தச் செலவுகளை மீட்டுப் பெறுவதையும் அவருக்குப் பண இழப்பு ஏற்படாமல் இருப்பதையும் உறுதிசெய்கின்றது.

பத்திரத் தொகையை நான் எப்போது செலுத்த வேண்டும்?

பொதுவாக வாடகை ஒப்பந்தத்தில் நீங்கள் கையொப்பம் இட்ட பிறகு உங்கள் பத்திரத் தொகை செலுத்தப்படுகின்றது. பத்திரத் தொகையைச் செலுத்துவதற்கு முன், நீங்கள் வீட்டில் குடியேறுவதற்கு முன் அல்லது குடியேறியவுடன் சரிபார்ப்பதற்காக வீட்டின் நிலைமை அறிக்கையின் நகல் ஒன்றை உங்கள் நில உரிமையாளர் உங்களுக்குக் கொடுக்க வேண்டும். வீட்டில் குடியேறிய 5 வேலை நாள்களுக்குள் உங்கள் முகவரிடம் அல்லது நில உரிமையாளரிடம் அறிக்கையை நீங்கள் திருப்பித் தர வேண்டும்.

Completing a condition report
எனது பத்திரத் தொகை எங்கு செல்கின்றது?

நீங்கள் உங்கள் பத்திரத் தொகையைச் செலுத்தியவுடன், சட்டத்தின்படி, உங்கள் நில உரிமையாளர் அந்தப் பத்திரத் தொகையை குடியிருப்பு வாடகைப் பத்திர ஆணையத்தில் (RTBA) செலுத்த வேண்டும். உங்கள் வாடகைக் காலம் முழுவதும் பத்திரத் தொகையை அவர்கள் வைத்திருப்பார்கள்.

பத்திரத் தொகையைப் பெற்றவுடன் RTBA உங்கள் ‘பத்திர எண்ணுடன்’ உங்களுக்கு ஒரு இரசீது அனுப்பும். RTBA-இன் இணையத்தளத்தில் உங்கள் பத்திரத் தொகையைத் தேடுவதற்கு இந்தப் பத்திர எண்ணை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

பத்திரத் தொகையைப் பெற்ற 10 வேலை நாள்களுக்குள் உங்கள் பத்திரத் தொகையை RTBA-க்குச் செலுத்த வேண்டிய சட்டப்பூர்வக் கடமை உங்கள் நில உரிமையாளருக்கு உள்ளது. உங்கள் நில உரிமையாளரிடம் பத்திரத் தொகையைச் செலுத்திய 15 வேலை நாள்களுக்குள் RTBA இடமிருந்து பத்திரத் தொகைக்கான இரசீது உங்களுக்கு கிடைக்கப் பெறாவிட்டால், அதைப் பற்றி RTBA-க்கு நீங்கள் தெரிவிக்க வேண்டும்.

பத்திரத் தொகையில் இருந்து நில உரிமையாளர் எதற்கெல்லாம் உரிமைக்கோரல் விடுக்க முடியும்?

நீங்கள் வீட்டிலிருந்து வெளியேறிய பிறகு மட்டுமே, குறிப்பிட்ட சில காரணங்களுக்காக உங்கள் நில உரிமையாளர் உரிமைக்கோரல் விடுக்க முடியும். அவர் உங்கள் பத்திரத் தொகைக்கான உரிமைக்கோரல் விடுக்க முயற்சிக்கும் வாய்ப்பினைக் குறைக்க, நீங்கள்:

  • வீட்டின் நிலைமைகளில் ஏதாவது சீர்கேடுகள் ஏற்பட்டிருப்பதைக் கவனித்த உடனேயே உங்கள் நில உரிமையாளரிடம் தெரிவிக்க வேண்டும்;
  • நீங்கள் காலி செய்யும்போது உங்களால் அல்லது உங்கள் விருந்தினர்களால் வீட்டிற்கு ஏற்பட்ட சரிசெய்யப்படாத சேதம் எதுவும் இல்லை என்பதை உறுதிசெய்ய வேண்டும்;
  • காலி செய்யும்போது வீட்டிற்குச் சொந்தமான சலவை இயந்திரங்கள் அல்லது திரைச்சீலைகள் போன்ற பொருள்கள் எதையும் எடுத்துச் செல்லக்கூடாது;
  • வீட்டினை முடிந்த அளவுக்குச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்;
  • நில உரிமையாளருக்குச் செலுத்த வேண்டிய கட்டணங்கள் மற்றும் வாடகை அனைத்தையும் செலுத்தியிருக்க வேண்டும்.

Anika Legal பின்வரும் நிகழ்வுகளில் சட்ட ரீதியான உதவி வங்க முடியும்:

நீங்கள் தகுதியுடையவரா எனப் பார்க்க எங்கள் 10-நிமிட கேள்விப்பட்டியலை பூர்த்தி செய்யவும்.

How useful was this content?