எனது வாடகைக் காலம் முடிந்துவிட்டது - எனது பத்திரத் தொகையை நான் எப்படி திரும்பப் பெறுவது?

By Anika Legal | Thu 8th Dec. '22

உங்கள் வாடகைக் காலத்தின் முடிவில், ஏதாவது பிரச்சனைகள் அல்லது தகராறுகளின் காரணமாக முன்பு இருந்த அதே நிலைமையில் வீட்டினைக் காலி செய்தால் நீங்கள் வெளியேறிய உடனேயே உங்கள் பத்திரத் தொகை உங்களுக்கு திருப்பித் தரப்படும்.


உங்கள் பத்திரத் தொகையைத் திரும்பப் பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்க, சாவிகளை நீங்கள் திரும்ப ஒப்படைத்த பிறகு இந்த படிநிலைகளைப் பின்பற்றவும்:


படிநிலை 1

நீங்கள் சாவிகளை ஒப்படைத்து விட்டீர்கள் என்பதை எழுத்துப்பூர்வமாக உறுதிசெய்யவும் மற்றும் இறுதி ஆய்வில் பங்கேற்க வாய்ப்புத் தருமாறு கோரவும்


படிநிலை 2

முன்னெச்சரிக்கையாக இறுதி ஆய்வில் பங்கேற்கவும், உங்களால் பங்கேற்க முடியாவிட்டால் இறுதி ஆய்வின் முடிவுகளை உறுதிசெய்யுமாறு நில உரிமையாளரிடம் கேட்கவும்

வீட்டின் நிலைமை பற்றி நில உரிமையாளருக்கு சில கவலைகள் இருந்தால் அவர் உங்களைத் தொடர்புகொள்வதற்கான வாய்ப்பு உள்ளது. அவ்வாறான சூழ்நிலையில், நில உரிமையாளர் உங்கள் பத்திரத் தொகையில் உரிமைக்கோரல் விடுக்காமல் இருக்க வீட்டிற்குத் திரும்பச் சென்று எழுப்பப்பட்ட பிரச்சனைகளைச் சரிசெய்ய முடியுமா என்பதைப் பற்றிக் கலந்துரையாடுவதற்கான வாய்ப்பு உங்களுக்கு உள்ளது.

படிநிலை 3

நில உரிமையாளர் பத்திரத் தொகை மீது உரிமைக்கோரல் விடுக்க முயற்சிக்கிறாரா எனப் பார்க்க சாவிகளை ஒப்படைத்த பிறகு 14 நாள்கள் காத்திருக்கவும்.

நில உரிமையாளர் உங்கள் பத்திரத் தொகை மீது உரிமைக்கோரல் விடுக்க விரும்பினால், வாடகை ஒப்பந்தம் முடிவுற்ற பிறகு 14 நாள்களுக்குள் அவர்கள் VCAT-க்கு விண்ணப்பிக்க வேண்டும். நில உரிமையாளர் பத்திரத் தொகைக்கு விண்ணப்பித்திருந்தால், உதவி பெற ஏதாவது உதவி தேவைப்பட்டால் எங்களிடம் கேட்கவும்.

படிநிலை 4

சாவியை நீங்கள் ஒப்படைத்த பிறகு 14 நாள்களுக்கு மேல் ஆகியிருந்தால், நீங்கள் எதையும் கேட்க வேண்டியதில்லை.

  • உங்கள் பத்திரத் தொகையைத் திரும்பப் பெற உங்கள் நில உரிமையாளரின் ஒப்புதல் இன்றி நேரடியாக நீங்களே RTBA-க்கு விண்ணப்பிக்கலாம். இந்த உரிமைக் கோரலை விடுக்க கால அவகாசம் எதுவும் இல்லை, ஆனால் இந்த நடைமுறை முடிய 21 நாள்கள் வரை ஆகலாம்.
  • நீங்கள் RTBA-க்கு விண்ணப்பித்தவுடன், உங்கள் பத்திரத் தொகைக்கு VCAT-க்கு ஏற்கனவே விண்ணப்பித்திருக்கிறீர்கள் என்பதை 14 நாள்களுக்குள் காண்பிக்குமாறு நில உரிமையாளர் கேட்டுக்கொள்ளப்படுவார். அவர் அவ்வாறு செய்யத் தவறினால், உங்கள் விண்ணப்பத்தின்படி பத்திரத் தொகை செயலாக்கம் செய்யப்படும்.

Anika Legal பின்வரும் நிகழ்வுகளில் சட்ட ரீதியான உதவி வங்க முடியும்:

நீங்கள் தகுதியுடையவரா எனப் பார்க்க எங்கள் 10-நிமிட கேள்விப்பட்டியலை பூர்த்தி செய்யவும்.

How useful was this content?