நான் ஒரு புதிய இடத்திற்குக் குடிபெயரும்போது என்ன ஆவணங்கள் மிக முக்கியமாகத் தேவைப்படுகின்றன?

By Anika Legal | Wed 7th Dec. '22

ஒரு வாடகை ஒப்பந்தம் செய்துகொள்ளும்போது நீங்கள் பெறுகின்ற ஆவணங்களின் எண்ணிக்கை உங்களை மலைக்கச் செய்வதாக இருக்கலாம். வீட்டில் நீங்கள் வசிக்கும் காலத்தில் உங்கள் வாடகை உரிமைகளைப் பாதுகாக்க உதவுவதற்கு, இந்த வலைப்பதிவில் நீங்கள் கவனமாகக் கண்டறிந்து மதிப்பாய்வு செய்ய வேண்டிய முக்கியமான ஆவணங்கள் சுட்டிக்காட்டப்பட்டன:

  • வாடகை ஒப்பந்தம்
  • உள்வரு நிலைமை அறிக்கை; மற்றும்
  • பத்திரத் தொகை பதிவு மின்னஞ்சல்கள்

வாடகை ஒப்பந்தம்

வாடகை ஒப்பந்தம் என்பது உங்களுக்கும் நில உரிமையாளருக்கும் இடையே செய்யப்படும் சட்டப்பூர்வ ஒப்பந்தம் ஆகும். இது பின்வருபவை பற்றிய விதிமுறைகளை உள்ளடக்கியதாக இருக்கும்:

  • வாடகை மற்றும் பத்திரத் தொகை
  • வாடகை எப்போது மற்றும் எப்படிச் செலுத்தப்பட வேண்டும்
  • வாடகை ஒப்பந்தம் எவ்வளவு காலம் செல்லுபடியாகும்
  • நீங்கள் முன்கூட்டியே வீட்டினை காலி செய்ய விரும்பினால் என்ன நிகழும் மற்றும் இதைச் செய்வதற்கு ஆகும் செலவுகள், மற்றும்
  • பயன்பாட்டுப் பொருள்களுக்கு நீங்கள் பொறுப்பேற்க வேண்டுமா அல்லது உங்கள் செல்லப் பிராணிகளும் அங்கே வாழ முடியுமா என்பதைப் போன்ற ஏதேனும் சிறப்பு விதிகள்.


நிலைமை அறிக்கை

நிலைமை அறிக்கையானது நீங்கள் குடியேறும்போது வீட்டின் நிபந்தனை பற்றிய தகவல்களை வழங்குகின்றது. இதில் சுவர்கள், கதவுகள், பாவுப் பலகைகள் மற்றும் தரைகள் உள்ளிட்ட ஒவ்வோர் அறை மற்றும் இடப்பரப்பின் நிலைமையும் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். வேலை செய்யாத, சேதமடைந்த அல்லது உடைந்த பொருள்கள் எல்லாவற்றைப் பற்றியும் அதில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். இது, நீங்கள் குடியேறும்போது உங்கள் வீடு எப்படி இருந்தது என்பதைக் குறிப்பிடுகின்ற முக்கியமான ஆதாரம் ஆகும்.

நீங்கள் குடியேறுவதற்கு முன் உங்கள் நில உரிமையாளர் அல்லது அவருடைய முகவர் நிலைமை அறிக்கையின் நகல் ஒன்றை கட்டாயமாக உங்களுக்குக் கொடுக்க வேண்டும். அவர்கள் உங்களுக்கு நிலைமை அறிக்கையைக் கொடுக்கவில்லை என்றால், நிலைமை அறிக்கையை நீங்களாகவே முன்வந்து பூர்த்தி செய்ய வேண்டும்.

நீங்கள் குடியேறியவுடன், உடனடியாக வீட்டினை ஆய்வு செய்து, சேதமடைந்த, உடைந்த அல்லது அழுக்கடைந்த எல்லாப் பொருள்களைப் பற்றிய தகவல்களும் அதில் இடம்பெற்றிருப்பதை உறுதிசெய்ய வேண்டும். நீங்கள் அவற்றை புகைப்படங்கள் கூட எடுத்து உங்கள் வீட்டின் உரிமையாளருக்கு அல்லது அவருடைய முகவருக்கு அனுப்பலாம். நீங்கள் பார்க்கும் ஒவ்வொரு பிரச்சனையையும் பட்டியலிடுவது நில உரிமையாளருடன் உங்களை சிக்கலில் மாட்டிவிடாது, ஏனென்றால் நீங்கள் ஏற்கனவே குத்தகை ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டிருக்கிறீர்கள். நிலைமை அறிக்கை துல்லியமாக இருப்பதை உறுதி செய்வது, வீட்டிற்கு நீங்கள் ஏதாவது சேதம் ஏற்படுத்தினீர்களா என்பதைப் பற்றி ஏதாவது சர்ச்சை எழும்போது பிற்காலத்தில் உங்களைப் பாதுகாக்கும்.

நீங்கள் குடியேறிய 5 வேலை நாள்களுக்குள் உங்களுடைய கையொப்பமிட்ட நிலைமை அறிக்கையின் நகலை நில உரிமையாளருக்கு அல்லது அவருடைய முகவருக்கு நீங்கள் கட்டாயமாக அனுப்ப வேண்டும். உங்களிடமும் அதன் ஒரு நகலை வைத்திருக்க வேண்டும்.

RTBA இடமிருந்து மின்னஞ்சல்கள்

பத்திரத் தொகை என்பது ஒரு புதிய வீட்டில் நீங்கள் குடியேறுவதற்கு முன் செலுத்த வேண்டிய பணம் ஆகும். வீட்டில் எந்தச் சேதமும் ஏற்படுத்தப்படாவிட்டால், நீங்கள் வீட்டைக் காலி செய்யும்போது இது வழக்கமாக திருப்பிக் கொடுக்கப்படும். இதற்கிடையில், இந்தப் பத்திரத் தொகை குடியிருப்பு வாடகைப் பத்திர ஆணையம் அல்லது 'RTBA' வசம் வைத்திருக்கப்படும்.

பத்திரத் தொகையை நீங்கள் செலுத்தியவுடன், உங்கள் நில உரிமையாளர் அந்தப் பத்திரத் தொகையைப் பெற்ற 10 நாள்களுக்குள் அதை RTBA வசம் செலுத்த வேண்டும். உங்கள் பத்திரத் தொகை பெறப்பட்டதை உறுதி செய்யும் விதமாக இடமிருந்து RTBA மின்னஞ்சல் வருகின்றதா என நீங்கள் பார்க்க வேண்டும் - இந்த மின்னஞ்சல் உங்களுக்கு கிடைக்கப்பெற்றவுடன் உங்கள் பெயர் அதில் எழுத்துப் பிழையின்றி இருக்கின்றதா என்பதை உன்னிப்பாகக் கவனித்து உறுதி செய்ய வேண்டும். இந்த மின்னஞ்சலில் உங்கள் பத்திர எண் குறிக்கப்பட்டிருக்கும் என்பதால் இதைச் சேமித்து வைத்துக்கொள்ளவும் மற்றும் நீங்கள் இதை எந்த நேரத்திலும் RTBA இணையமுகப்பில் உங்கள் பத்திரத்தைப் பார்ப்பதற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Anika Legal பின்வரும் நிகழ்வுகளில் சட்ட ரீதியான உதவி வங்க முடியும்:

நீங்கள் தகுதியுடையவரா எனப் பார்க்க எங்கள் 10-நிமிட கேள்விப்பட்டியலை பூர்த்தி செய்யவும்.

How useful was this content?